ஆட்டுக்கிடைக்கு தீ வைப்பு 20 ஆடுகள் கருகி இறப்பு
தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆட்டுக் கிடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் 20 ஆட்டுக்குட்டிகள் இறந்தன.சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளம் கே. ரெட்டியபட்டியை சேர்ந்தவர் வேலுச்சாமி 57. 80க்கும் மேற்பட்ட ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த உடையார், கோட்டைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து குருக்கள்பட்டியைச் சேர்ந்த பாப்பா தோட்டத்தில் மூவரும் சேர்ந்து ஆட்டுக் கிடை அமைத்திருந்தனர். ஆடுகள் மேய்ச்சலுக்கு சென்றிருந்தன. மேய்ச்சலுக்கு செல்ல முடியாத செம்மறி குட்டிகள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மர்மநபர்கள் பட்டிக்கு தீ வைத்தனர். இதில் ஓலை கூண்டுக்குள் இருந்த 20 ஆட்டுக்குட்டிகள் இறந்தன. புகாரின் பேரில் சின்னகோவிலாங்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.