உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி /  மாலியில் 5 தமிழர்கள் கடத்தல்; 50 நாட்களாகியும் மீட்கப்படவில்லை

 மாலியில் 5 தமிழர்கள் கடத்தல்; 50 நாட்களாகியும் மீட்கப்படவில்லை

தென்காசி: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் வேலை செய்து வந்த 5 தமிழர்கள் ஆயுதம் ஏந்திய கும்பலால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனர். ஐம்பது நாட்களாகியும் அவர்கள் மீட்கப்படாததால் குடும்பத்தினர் கடும் மன உளைச்சலில் உள்ளனர். ராணுவ ஆட்சி நடக்கும் மாலியில் அரசுக்கு எதிராக ஆயுதக்குழுக்களின் தாக்குதல்கள் தொடர்கின்றன.இந்நிலையில் கடந்த நவ., 6 ல் மேற்கு மாலியில் உள்ள கோப்ரி அருகே தனியார் நிறுவனம் ஒன்றில் நுழைந்த ஆயுதக்கும்பல், அங்கு பணிபுரிந்த 5 தமிழர்களை கடத்திச் சென்றது. அவர்கள் மாலி மின்மயமாக்கல் திட்டத்தில் பணிபுரிந்தவர்கள். இக்கடத்தல் சம்பவத்தைத்தொடர்ந்து அதே நிறுவனத்தில் பணிபுரிந்த மற்ற இந்தியர்கள் பமாகோவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுவரை கடத்தலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடத்தப்பட்டவர்கள் விவரம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த இசக்கி ராஜா, தளபதி சுரேஷ், தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே கொடியங்குளத்தைச் சேர்ந்த பொன்னுதுரை, பேச்சிமுத்து, புதியவன் ஆகியோர் கடத்தப் பட்டனர். 50 நாட்களாக மீட்பு பணிகள் நடக்காததால் குடும்பத்தினர் மன உளைச்சலில் உள்ளனர். தங்களை உடனடியாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்துச் செல்லுமாறு கடத்தப்பட்டவர்கள் வீடியோ மூலம் மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ