உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி /  மின் வேலி அமைத்து விலங்கு வேட்டை

 மின் வேலி அமைத்து விலங்கு வேட்டை

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை பகுதியில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். ஊத்துமலை அருகே மறுக்காலன்குளத்தைச் சேர்ந்த காசிபாண்டியன் மற்றும் மேசியாபுரத்தைச் சேர்ந்த முருகராஜ் ஆகியோர், தங்களது தோட்டத்தில் மின்வேலி அமைத்து வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுவதாக வனத்துறைக்கு புகார் சென்றது. இதனைத்தொடர்ந்து ஆலங்குளம் வனத்துறையினர் நடத்திய சோதனையில் மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தோட்டத்திற்கு வழங்கப்பட்ட விவசாய இலவச மின் இணைப்பையும் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்திய குற்றத்திற்காக, நிரந்தரமாக துண்டித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ