மேலும் செய்திகள்
ரிக் ஷா கவிழ்ந்து மாணவி உயிரிழப்பு
24-Sep-2025
திருநெல்வேலி:தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே வல்லத்தை சேர்ந்த, 16 வயது சிறுமி, குற்றாலத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். மாணவிக்கு, இன்ஸ்டாகிராம் மூலமாக அகரகட்டுவை சேர்ந்த கோகுல், 24, என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அக்., 5 மாலை, கோகுல் தன் டூ - வீலரில், மாணவியுடன் செங்கோட்டை - குற்றாலம் சாலையில் வேகமாக சென்றார். வளைவில் டூ - வீலர் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில், காயமடைந்த மாணவி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் இறந்தார். சிறுமி இறப்பிற்கு காரணமான வாலிபர் மீது, போக்சோ வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, சிறுமி குடும்பத்தினர், செங்கோட்டை போலீஸ் ஸ்டேஷன் முன் நேற்று மறியலில் ஈடுபட்டனர். தலைமறைவான வாலிபரை போலீசார் தேடுகின்றனர்.
24-Sep-2025