உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / தென்காசி கனிம அதிகாரி நீலகிரிக்கு நடை கட்டினார்

தென்காசி கனிம அதிகாரி நீலகிரிக்கு நடை கட்டினார்

தென்காசி:திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கல்குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் கனிமம் தோண்டி எடுக்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் அனுமதி இல்லாத கல்குவாரிகள் செயல்படுவது உட்பட பல்வேறு முறைகேடு புகார்கள் வந்தன. இதனால் தென்காசி கனிமவளத்துறை உதவி இயக்குனர் வினோத்தை, நீலகிரி மாவட்டத்திற்கு மாற்றம் செய்து துறை கமிஷனர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டார். ஆனால், வினோத் அங்கு செல்லாமல் தென்காசியிலேயே இருந்தார்.தென்காசியில் புதிய உதவி இயக்குனராக பணியில் சேர கிருஷ்ணகிரியில் இருந்து வந்த ஈஸ்வரன் காத்திருந்தார். இது குறித்து, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, நேற்று வினோத் அவசர, அவசரமாக நீலகிரி சென்று உதவி இயக்குனராக பொறுப்பேற்றார். ஈஸ்வரன் தென்காசியில் பணியில் சேரவில்லை. அவர் மீண்டும் கிருஷ்ணகிரி சென்றார். தென்காசி மாவட்ட உதவி இயக்குனர் பொறுப்பை திருநெல்வேலி மாவட்ட உதவி இயக்குனர் பாலமுருகன் கூடுதலாக கவனிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ