உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / மான் மீது பைக் மோதி விபத்து: இருவர் பலி

மான் மீது பைக் மோதி விபத்து: இருவர் பலி

ஆய்குடி: தென்காசி அருகே குறுக்கே பாய்ந்த மான் மீது மோதி, பைக்கில் வந்த இருவர் பரிதாபமாக இறந்தனர். தென்காசி மாவட்டம், ஆய்குடியைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து, 74; ஓய்வு பெற்ற மின் ஊழியர். மேலக்கடையநல்லுார், இந்திரா நகர் நியூ காலனியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 32; எலக்ட்ரீஷியன். இருவரும் சில தினங்களுக்கு முன், ஆய்குடியில் இருந்து தென்காசி நோக்கி டூ - வீலரில் சென்றனர். அப்போது, சாலையின் குறுக்கே திடீரென மான் ஒன்று பாய்ந்ததால், அதன் மீது மோதி நிலை தடுமாறிய இருவரும், டூ - வீலரில் இருந்து துாக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த இருவரையும், அருகிலிருந்தோர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சிமுத்து இறந்தார். மணிகண்டன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். ஆய்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை