உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தென்காசி / ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி சிக்கினார்

ரூ.4,500 லஞ்சம் வாங்கிய கிராம அதிகாரி சிக்கினார்

வீரகேரளம்புதுார்:பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., பிடிபட்டார்.தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதுார் அருகே கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் குமாரவேல், 52. இவருக்கு பூர்வீகமான 1.27 ஏக்கர் நிலத்தை, பட்டா பெயர் மாற்றம் செய்ய ஆன்லைனில் விண்ணப்பித்தார். ராஜகோபாலபேரி கிராம நிர்வாக அதிகாரி பத்மாவதி, 39, பட்டா மாற்றத்திற்கான ஆவணங்களை குமாரவேலுவிடம் கேட்டு பெற்றார். பட்டா மாறுதலுக்கு 10,000 ரூபாய் செலவாகும் என்றார். பின், 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். குமாரவேல் மறுத்ததால் 4,500 ரூபாய் மட்டுமாவது லஞ்சம் தருமாறு கேட்டார்.லஞ்சம் தர விரும்பாத குமாரவேல், லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., பால் சுதரிடம் புகார் செய்தார். போலீசார், ரசாயன பவுடர் தடவிய 4,500 ரூபாயை குமாரவேலிடம் கொடுத்தனர். அந்த பணத்தை குமாரவேல், பத்மாவதியிடம் கொடுத்தபோது, போலீசார் அந்த பெண்ணை கைது செய்தனர். பத்மாவதி வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !