உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சையில் குட்கா பொருட்கள் விற்பனை 10 கடைக்கு சீல்; ரூ. 2.50 லட்சம் அபராதம்

தஞ்சையில் குட்கா பொருட்கள் விற்பனை 10 கடைக்கு சீல்; ரூ. 2.50 லட்சம் அபராதம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பெரிய கடை தெருவில் குட்கா விற்பனை தொடர்பாக கிழக்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள மளிகை கடையினை சோதனை செய்த போது, மளிகை பொருட்களில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான 230 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கும்பகோணம் துக்காம்பாளைய தெருவை சேர்ந்த முரளிதரன், 61, சரவணன், 40, கவாரத்தெருவை சேர்ந்த முத்துசெல்வன், 50 ஆகிய மூவரை கைது செய்தனர். இதையடுத்து, தஞ்சை, கும்பகோணம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நேற்று காலை கும்பகோணம் மாநகராட்சியில் தாராசுரம், பெரிய கடை தெரு, பாலக்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதில், ஏழு கடைகளில் குட்கா பொருள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இந்த ஏழு கடைகளில் இருந்து சுமார் 15 கிலோ குட்கா பொருட்களை அதிகாாிகள் பறிமுதல் செய்தனர். மேலும், நேற்றுமுன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்களின் மூன்று கடைளையும் சேர்த்து 10 கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், 10 கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா 25,000 வீதம் 2.50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி