உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / அரசு வேலை ஆசை காட்டி மோசடி செய்த 2 பேர் கைது 

அரசு வேலை ஆசை காட்டி மோசடி செய்த 2 பேர் கைது 

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே திருவிசநல்லுார் பகுதியைச் சேர்ந்தவர் வினோத், 38. இவர் தன் மனைவிக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். அப்போது, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதியைச் சேர்ந்த வரதராஜன், 62, அறிமுகம் கிடைத்து உள்ளது.வினோத் மனைவிக்கு வருவாய்த் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, வரதராஜன், 7 லட்சம் ரூபாயை தன் நண்பரான கும்பகோணத்தைச் சேர்ந்த செல்வகுமார், 40, வாயிலாக கொடுக்க கூறியுள்ளார். வினோத் 2021ல், 7 லட்சம் ரூபாயை வரதராஜனிடம் கொடுத்துள்ளார். வரதராஜன் பணத்தை பெற்றுக்கொண்டு, வேலை வாங்கி தராமல் இருந்தார். வினோத் நண்பரான திருபுவனத்தைச் சேர்ந்த முத்து என்பவரிடம் வரதராஜன் வேலை வாங்கி தருவதாக, 7 லட்சம் ரூபாயை ஏமாற்றியுள்ளார். நாச்சியார்கோவில் போலீசார், வரதராஜன், செல்வகுமார் இருவரையும் கைது செய்தனர். வரதராஜன், வலங்கைமான் வட்டாரத்தில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சத்துணவு பணியாளர்கள் சங்க மாநில தலைவராக இருந்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ