உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / உரிமை கோரப்படாத 26 உடல்கள் அடக்கம்

உரிமை கோரப்படாத 26 உடல்கள் அடக்கம்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதரவின்றி, உடல் நலிவுற்று இறந்து கிடந்த உடல்கள் போலீசாரால் மீட்கப்பட்டு, அவர்களது உறவினர்களிடம் ஒப்படைப்படுகின்றன. இதற்காக மருத்துவ கல்லுாரி மருத்துவமனை பிரேத கிடங்கில், பல உடல்கள், சில மாதங்களாக வைக்கப்பட்டிருந்தன. எனினும், அவற்றை பெற யாரும் வராத நிலையில், உடல்களை அடக்கம் செய்ய மருத்துவக்கல்லுாரி நிர்வாகம், போலீசாரிடம் அனுமதி கேட்டது.அனுமதி கிடைத்ததை அடுத்து, 26 உடல்களை அடக்கம் செய்ய, நேசக்கரம் என்ற தன்னார்வ அமைப்பு முன்வந்தது. நேற்று முன்தினம் இரவு, 26 உடல்களையும், தஞ்சாவூர் ராஜகோரி சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு புதைக்கப்பட்டு, மதச்சடங்குகள் செய்யப்பட்டன.இது குறித்து தன்னார்வ அமைப்பினர் கூறியதாவது:ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்வது சமூக கடமை என்ற நோக்கத்தோடு, நேசக்கரம் அமைப்பினர், தொடர்ச்சியாக இப்பணியை மேற்கொள்கிறோம். இதுவரை 350க்கும் மேற்பட்ட உடல்களை அடக்கம் செய்துள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி