மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூரில் நேற்று சி.ஐ.டி.யூ., மாநிலக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:லோக்பா தேர்தல் முடிவுகள் பா.ஜ.,வின் ஏதோச்சதிகார ஆட்சிக்கு கடிவாளமாக மாறி இருக்கிறது. அந்த ஆட்சி செய்த தவறுகளுக்கு தண்டனையாகவும் இந்த தீர்ப்பை நாம் பார்க்கலாம்.கூட்டணி ஆட்சி என்று அவர்கள் அமைத்த பிறகு, ஏற்கனவே தனி பெரும்பான்மையாக இருந்த போது அவர்கள் எடுத்த அரசியல் சட்ட விரோத நடவடிக்கையை எடுக்க முடியாது. அரசியல் சட்டத்தை மதித்து ஆட்சி நடத்த வேண்டும். தமிழக அரசு தொழிலாளர்கள், விவசாயிகள், போக்குவரத்து தொழிலாளர்கள், ஓய்வூதியர்கள், அங்கன்வாடி திட்டப் பணியாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்னைகள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.சாதாரண முறைசாரா தொழிலாளர்களுக்கு அரசாங்கம் ஒரு வாழ்வாதாரத்தை அதிகப்படுத்தக்கூடிய காரியத்தை செய்ய வேண்டும். நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தி இடையூறு செய்வதை மாவட்ட நிர்வாகத்தினர் செய்வதை அரசு தடுக்க வேண்டும்.நடைபாதை தொழிலாளர்களுக்கு மாற்று இடம் தர வேண்டுமே, தவிர அவர்களை தொழில் செய்யவிடாமல் தடுப்பது சரியல்ல. தொழிலாளர்கள் நல வாரியத்தில், 74 லட்சம் உறுப்பினர்களின் தரவுகள் அழிந்து விட்டதாக அரசு கூறுவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.இதை எளிமையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், கோரிக்கை மனு விண்ணப்பித்தவர்களுக்கு அவர்களின் பலன் கிடைக்கவில்லை.போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை பொருத்தவரையில், உயர் நீதிமன்றம் எங்களின் கோரிக்கை நியாயம், போராட்டமும் நியாயம், போராட்டத்தை நாங்கள் தடை செய்யவில்லை. ஆனால் மக்களின் நலனை முன்னிட்டு பொங்கலுக்காக போராட்டத்தை நிறுத்தி வைக்க கோரியது.அதன் பிறகு தேர்தல் வந்தது. தற்போது தேர்தல் முடிந்து விட்டதால், தமிழக அரசு சுமூகமாக பிரச்னைக்கு தீர காண வேண்டும். ஒரு வேலை இல்லாவிட்டால் அரசுக்கு அழுத்தம் தருகிற போராட்டங்களை முன்னெடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025