உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மாசி மகம் கொடியேற்றம் 12ல் தீர்த்தவாரிக்கு ஏற்பாடு

மாசி மகம் கொடியேற்றம் 12ல் தீர்த்தவாரிக்கு ஏற்பாடு

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும், ஆண்டுதோறும் மாசிமக பெருவிழாவும் சிவாலயம் மற்றும் வைணவக் கோவில்களில் நடப்பது வழக்கம். இந்தாண்டுக்கான மாசிமக பெருவிழாவை முன்னிட்டு நேற்று காலை, காசி விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர் கோவிலில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.முக்கிய நிகழ்வாக வரும், 12ம் தேதி, மகாமக குளத்தில் அனைத்து கோவில்களில் இருந்தும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவாக புறப்பட்டு, கரையில் எழுந்தருளியதும், மதியம், 1:00 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு மகாமக குளத்தில் மகா ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.மாசிமக விழாவின் முதன்மை கோவிலான ஆதிகும்பேஸ்வரர் கோவில், ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவில்களில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளதால், இந்தாண்டு மாசிமக பெருவிழா உற்சவம் கிடையாது. அதேபோல, மாசிமக பெருவிழாவை முன்னிட்டு, இன்று பெருமாள் கோவில்களில் கொடியேற்றத்தோடு விழா துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ