உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / டி.என்.ஏ., பரிசோதனை உறுதியாகியும் மணக்க மறுத்த காதலன்: பெண் தர்ணா  

டி.என்.ஏ., பரிசோதனை உறுதியாகியும் மணக்க மறுத்த காதலன்: பெண் தர்ணா  

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வலசக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மகள் ஹரிப்பிரியா, 20. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஹரிப்பிரியா பெரியப்பா பாஸ்கரன் ஆதரவில் இருந்து வந்தார். இந்நிலையில், பக்கத்து கிராமமான வலசேரிக்காடு கிராமத்தை சேர்ந்த நாகலிங்கம் மகன் பிராகஷ் என்பவரை காதலித்து வந்த நெருக்கத்தில், ஹரிப்பிரியா கர்ப்பமானார். ஆனால், திருமணம் செய்து கொள்ளாத நிலையில், 2023 ஜூன் 22ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இச்சூழலில், குழந்தை தன்னுடையது அல்ல என பிரகாஷ் விலகினார். ஹரிபிரியா புகாரின்படி, பட்டுக்கோட்டை மகளிர் போலீசார் டி.என்.ஏ., பரிசோதனைக்கு ஏற்பாடு செய்தனர். இதில், குழந்தையின் டி.என்.ஏ., பிரகாஷின் டி.என்.ஏ.,வுடன் ஒத்துப்போனது. பிரகாஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது, ஜாமினில் வெளியே வந்த பிரகாஷ், வேறொரு பெண்ணை திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறார்.இதையறிந்த ஹரிப்பிரியா நேற்று பட்டுக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் முன், கைக்குழந்தையுடன் தர்ணாவில் ஈடுபட்டார். பட்டுக்கோட்டை போலீசார் பிரகாஷ் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின், ஹரிப்பிரியா போராட்டத்தை கைவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ