உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / நீட் தேர்வு போராட்டம் தி.மு.க., நாடகம்

நீட் தேர்வு போராட்டம் தி.மு.க., நாடகம்

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் நேற்று அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்களில் ஓராண்டாக விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு, முழுமையாக கிடைக்காததால், 3 லட்சம் ஏக்கர் பயிர்கள் காய்ந்து, கருகி பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்தனர்.தி.மு.க., கூட்டணியினர்கடந்த முறை தமிழகம், புதுச்சேரியில் 39 லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்று லோக்சபாவிற்கு சென்றனர். அப்போதே மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய வைத்திருக்கலாம். தற்போது தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தி.மு.க., கூட்டணியினர் லோக்சபாவில் போராடி அழுத்தம் கொடுத்து, மத்திய அரசை பணிய வைக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, திராவிட மாடல் ஆட்சி என கூறி, இங்கு போராட்டம் நடத்துவதால் என்ன பயன்? மக்களை ஏமாற்றுவதற்காக கண் துடைப்பு நாடகத்தைதான் தி.மு.க.,வினர் நடத்துகின்றனர்.பன்னீர்செல்வம் எப்போதுமே அ.தி.மு.க.,வுக்கு விசுவாசமாக இருந்தது கிடையாது. அவரை ஒரு தொண்டனும் மதிக்கமாட்டான். பலாப்பழத்தை வைத்து பூஜை செய்து, எப்படியாவது வெற்றி பெற்று மத்திய அமைச்சராகி விடலாம் என கனவு கண்டார். கட்சிக்கு யார் துரோகம் செய்ததாலும், பன்னீர்செல்வம் நிலைதான் வரும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை