உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கூட்டுறவு சங்க முறைகேடுகளை  கண்டித்து விவசாயிகள் போராட்டம்

கூட்டுறவு சங்க முறைகேடுகளை  கண்டித்து விவசாயிகள் போராட்டம்

தஞ்சாவூர்:கூட்டுறவு சங்கங்களின் நடைபெறும் முறைகேடுகளை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, சங்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் தலைமை வகித்தார். இதில், நுாற்றுக்கணக்கான விவாசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் கூறியதாவது:தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடக்கின்றன. விவசாயிகள் வாங்கிய கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தியும், வங்கி கணக்கில் வரவு வைப்பது கிடையாது. கணக்கில் வரவு வைக்காமல் விவசாயிகள் மீண்டும் கடன் பெற தகுதி இல்லை என கூறப்படுகிறது.இவ்வாறு கூறினர்.இது குறித்து, சங்க ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் நிருபர்களிடம் கூறும்போது,''தஞ்சாவூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் 5 ஆண்டுகளாக நடைபெறும் முறைகேடுகள் குறித்து, இணைப்பதிவாளர்களிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ