உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கூட்டு பாலியல் வன்கொடுமை: சிகிச்சை தர மறுத்த அரசு மருத்துவமனைக்கு நோட்டீஸ்

கூட்டு பாலியல் வன்கொடுமை: சிகிச்சை தர மறுத்த அரசு மருத்துவமனைக்கு நோட்டீஸ்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாட்டில், 23 வயது இளம்பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த கவிதாசன், 25, அவரது நண்பர்கள் திவாகர், 27, பிரவீன், 20, மற்றும் 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

வாக்குமூலம்

இது தொடர்பாக, ஒரத்தநாடு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நான்கு பேரையும் கைது செய்தனர்.இந்நிலையில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணை, அவரது உறவினர்கள், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனையில் இருந்த டாக்டர்கள், பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து, திருப்பி அனுப்பியுள்ளனர். பின், தஞ்சாவூர் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் இளம்பெண் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், ஒரத்தநாடு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் அழகேசன், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலருக்கு அனுப்பியுள்ள நோட்டீஸ்:சட்டப்பிரிவு 377 பி.என்.எஸ்.எஸ்.,ன்படி, கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்கு வரும் போது, அவர்களுக்கு முதலுதவி அல்லது இலவச மருத்துவ சிகிச்சைக்கு வழிவகை செய்து, அத்தகைய நிகழ்வு குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

அப்படி இல்லாமல் சிகிச்சைக்கு வந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க தவறியுள்ளீர்கள். எனவே, அன்றைய தினம் மருத்துவமனையில் பணியில் டாக்டராக இருந்தவர் மீது ஏன் பிரிவு 200 பி.என்.எஸ்.,ன்படி வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கக் கூடாது! சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் குறித்து வரும் 27ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும், கஞ்சா விற்பனையை தடுக்காத தி.மு.க., அரசு மற்றும் போலீசாரை கண்டித்தும், நேற்று பாப்பாநாடு கடைத்தெருவில், நுாற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ