உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / களிமேடில் அப்பர் சதய விழா 2 ஆண்டுக்கு பின் விமரிசை

களிமேடில் அப்பர் சதய விழா 2 ஆண்டுக்கு பின் விமரிசை

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே களிமேட்டில், 64 நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரான அப்பருக்கு மடம் அமைத்து, சித்திரை சதய நாளில் குரு பூஜை, கிராம மக்களால் ஆண்டு தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.அதன்படி, 2022ம் ஆண்டு, அப்பர் சுவாமியை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து, வீதியுலா வந்தபோது, மின் கம்பி தேர் மீது உரசியதில், மூன்று சிறுவர்கள் உட்பட, 11 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.இந்த விபத்து நிகழ்ந்த பிறகு, கடந்தாண்டு, களிமேட்டில் மிக எளிமையாக அப்பர் சதய விழா நடந்தது.இந்நிலையில், களிமேடு கிராம மக்கள் சார்பில், அப்பர் சதய விழா நேற்று தொடங்கி, மூன்று நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டது.அதன்படி, களிமேடு அப்பர் மடத்தில், புதிதாக தயாரிக்கப்பட்ட தேரில், அப்பர் பெருமானின், 300 ஆண்டு பழமையான ஓவியம் மற்றும் அப்பரின் உருவச் சிலையை வைத்து நேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.நாளை, அப்பர் சுவாமிகளுக்கு விடையாற்றி விழாவுடன் சதய விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ