உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / இளம்பெண் கூட்டு பலாத்காரம் மக்கள் கண்டன உண்ணாவிரதம்

இளம்பெண் கூட்டு பலாத்காரம் மக்கள் கண்டன உண்ணாவிரதம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பாப்பாநாடு பகுதியில் கடந்த 12ம் தேதி, 23 வயது பட்டதாரி இளம் பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுவன் உட்பட நான்கு பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து, ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் துறையினர், அந்த பெண்ணின் ஆண் நண்பர் கவிதாசன், பிரவீன், திவாகர் மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர்.இந்நிலையில், பாப்பாநாடு கடைத்தெரு பகுதியில் நேற்று, அப்பகுதியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கடைகளையும் அடைத்து, வணிகர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.கூட்டத்தில் பேசியதாவது:பாப்பாநாட்டில் கஞ்சா புழக்கம் அதிகமாக உள்ளது. பெண்கள் வெளியே நடமாடவே பயமாக உள்ளது. கூட்டு பாலியல் வழக்கில் கைதானவர்களில் ஒருவர் கஞ்சா விற்பனையில் தொடர்பு கொண்டவர். எனவே, கஞ்சாவை அரசு ஒழிக்க வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த, பட்டுக்கோட்டை தலைமை அரசு மருத்துவருக்கு விளக்கம் கேட்டு ஒரத்தநாடு நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதுபோல, பாப்பாநாடு போலீஸ் ஸ்டேஷனில் பணியில் இருந்த பெண் எஸ்.ஐ., சூர்யா, நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் ஏற்கனவே, ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்