உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தந்தை மீது போலீஸ் வழக்கு; விடுவிக்க சிறார்கள் கண்ணீர்

தந்தை மீது போலீஸ் வழக்கு; விடுவிக்க சிறார்கள் கண்ணீர்

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கண்டமங்கலம் பரமேஸ்வரன் காலனியை சேர்ந்த சசிகுமார், 48, கூலி தொழிலாளி. இவரது மனைவி தமிழ்செல்வி. இவர் கடந்த 2108ல் இறந்து விட்டார். இவர்களுக்கு ராமமூர்த்தி, 17, ராகுல், 16, ராகவி, 16, ரபாஸ்ரீ, 14, என நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சசிகுமாரின் நான்கு குழந்தைகளும், கலெக்டர் தீபக் ஜேக்கப்பை நேற்று சந்தித்து, தங்கள் தந்தை மீது மணல் திருடியதாக பொய் வழக்கு போட்டு, போலீசார் சிறையில் அடைத்துள்ளனர் என மனு அளித்தனர்.இது குறித்து, 16 வயது சிறுமி கூறியதாவது: எங்கள் தந்தை கூலி வேலை செய்து தான் எங்களை படிக்க வைத்தார். இந்நிலையில், திருக்காட்டுப்பள்ளி போலீசார் எங்கள் அப்பா, ஆற்றில் மணல் அள்ளுவதாக கூறி, கடந்த ஜூன் 30ம் தேதி எங்கள் வீட்டில் இருந்த தந்தையை கைது செய்தனர்.எங்கள் தந்தை எந்த தவறும் செய்யாத நிலையில் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். எங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இதனால் நாங்கள் அனாதையாக தவிக்கிறோம். கண் தெரியாத 70 வயது பாட்டி தான் எங்களை கவனித்துக் கொள்கிறார். எங்கள் தந்தையை விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை