மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
தஞ்சாவூர் : திருச்சியில், ஏ.டி.எஸ்.பி., பாலமுருகன், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் அடங்கிய குழுவினர், 6ம் தேதி தஞ்சாவூர் அருகே புதுக்குடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகப்படும் படியாக வந்த சொகுசு காரை சோதனை செய்ததில், மிகவும் தொன்மையான, ஆறு உலோக சிலைகள் இருந்தன.சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், காரை ஓட்டி வந்த, சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதி ராஜேஷ் கண்ணன், 42, காரில் வந்த மயிலாடுதுறை மாவட்டம், கொற்கை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன், 64, ஆகியோரிடம் விசாரித்தனர்.விசாரணையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன், லட்சுமணன் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டிய போது, இந்த ஆறு ஐம்பொன் சிலைகளும் கிடைத்துள்ளன. அவற்றை, அரசு அதிகாரிகளுக்கு தெரிவிக்காமல், வீட்டில் மறைத்து வைத்திருந்தார். தன் நண்பரான ராஜேஷ் கண்ணனிடம் தெரிவித்து இருந்தார்.ராஜேஷ்கண்ணன், தன் நண்பரும், லட்சுமணனின் மருமகனுமான, சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த திருமுருகன், 39, என்பவரும், சிலைகளை பார்த்து விட்டு, 'நேரம் வரும் போது வெளிநாட்டிற்கு கடத்தினால் நல்ல வருமானம் கிடைக்கும்' என கூறினார். இதற்கிடையில், ராஜேஷ் கண்ணனுக்கு சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பு கிடைத்துள்ளது.ஐந்து ஆண்டுகளுக்குப் பின், ராஜேஷ்கண்ணன், திருமுருகன், லட்சுமணன் மூவரும் ஐம்பொன் சிலைகளை வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்ப திட்டமிட்டு, 5ம் தேதி நள்ளிரவு, லட்சுமணன் வீட்டில் இருந்து, சிலைகளுடன் திருச்சி வழியாக சென்னை செல்ல முயன்ற போது பிடிபட்டனர்.இது தொடர்பாக, ராஜேஷ் கண்ணன், திருமுருகன், லட்சுமணனை கைது செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஆறு சிலைகளையும் பறிமுதல் செய்தனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025