உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பட்டப்பகலில் காரை மறித்து ஒப்பந்ததாரர் வெட்டி கொலை

பட்டப்பகலில் காரை மறித்து ஒப்பந்ததாரர் வெட்டி கொலை

தஞ்சாவூர், : திருவாரூர் மாவட்டம், சோழிங்கநல்லுாரைச் சேர்ந்தவர் பாபு, 48. தி.மு.க.,வைச் சேர்ந்த இவர் காரைக்கால் துறைமுகத்தில் போக்குவரத்து வாகன ஒப்பந்ததாரராக இருந்தார். இவர் நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில், கலந்து கொள்வதற்காக காரில் தன் மகன் பாலாவுடன், திருவாரூரிலிருந்து தஞ்சாவூருக்கு வந்தார்.தஞ்சாவூர் ஞானம் நகரில் கடை ஒன்றில், மொய் கவர் வாங்கி விட்டு மீண்டும் காரில் ஏறினார். அப்போது, எதிரே வந்த மற்றொரு காரில் இருந்த நபர்கள், பாபுவின் காரை வழி மறித்து நிறுத்தி விட்டு, விடாமல் ஹாரன் அடித்தனர். அப்போது காரை விட்டு இறங்கி வந்து கேட்ட பாபுவை, எதிரே வந்த காரில் இருந்து இறங்கிய மர்ம நபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த பாபு, அங்கேயே இறந்தார். முதற்கட்ட விசாரணையில், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி