மேலும் செய்திகள்
கணவரை கொன்று நாடகமாடியவர் கைது
22-Aug-2024
தஞ்சாவூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை சேர்ந்தவர் மணிவண்ணன், 27, சென்னையில் தனியார் நிறுவனத்தில் டிரைவர். தஞ்சாவூரை சேர்ந்த 26 வயது இளம்பெண் நர்சிங் முடித்து விட்டு, சென்னையில் பணியாற்றுகிறார். மணிவண்ணனும், இளம்பெண்ணும் சில ஆண்டுகளாக காதலித்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், மணிவண்ணனிடம் அந்த பெண் பேசுவது இல்லையாம். இதனால், ஆத்திரமடைந்த மணிவண்ணன், அந்த பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதையறிந்த அந்த பெண் தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார்.தலைமறைவாக இருந்த மணிவண்ணனை போலீசார், நேற்று முன்தினம் கர்நாடகாவில் கைது செய்து, தஞ்சாவூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
22-Aug-2024