மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், மேலமருத்துவகுடி கிராமத்தை சேர்ந்த பழனிவேல், 34, கோவிந்தராஜ், 30, அரவிந்தன், 28. மூவரும் சகோதரர்கள். பழனிவேல், அரவிந்தன் இருவரும் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர். கோவிந்தராஜுக்கு திருமணமாகவில்லை.நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு, மதுபோதையில் வீட்டிற்கு வந்த அரவிந்தன், தன் மனைவி மகாலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். சத்தம் கேட்டு வந்த பழனிவேல் சமரசம் செய்ய முயன்றார்.போதையில் இருந்த அரவிந்தன், 'குடும்ப விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்' எனக்கூறி, பழனிவேலை தாக்கி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அரவிந்தனை பழனிவேல் அடித்துள்ளார். ஆத்திரமடைந்த அரவிந்தன் வீட்டிலிருந்த கத்தியால், பழனிவேலின் இடதுபக்க மார்பில் பலமாக குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த பழனிவேல் பரிதாபமாக இறந்தார். சம்பவத்தில் காயமடைந்த அரவிந்தன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருநீலக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025