மேலும் செய்திகள்
புதுச்சேரி மது விற்ற டாஸ்மாக் சப்ளையர் கைது
24-Aug-2024
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், மேலக்காவேரி கே.எம்.எஸ்.நகரில், புதுச்சேரியில் இருந்து போலியான சரக்கு மற்றும் ஸ்பிரிட் ஆகியவற்றை வாங்கி வந்து, கும்பல் ஒன்று கள்ளத்தனமாக விற்பதாக திருச்சி, தஞ்சாவூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் இரவு, போலீசார் சோதனையில், மாதா கோவில் பகுதியில், சந்தேகத்திற்கிடமான இருந்த மூன்று பேரை விசாரித்தனர். அவர்கள் தங்கி இருந்த வீட்டில் சோதனை செய்தனர்.அப்போது, புதுச்சேரி ஸ்பிரிட் மற்றும் போலி மதுவை மொத்தமாக கடத்தி வந்து, கலர் சாயத்தை கலந்து, தமிழக அரசின் டாஸ்மாக்கில் விற்கப்பட்ட காலி மது பாட்டில்களில் நிரப்பி, போலியாக தயாரித்த தமிழக அரசு முத்திரை, டாஸ்மாக் ஸ்டிக்கரை ஒட்டி கள்ளசந்தையில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.இதையடுத்து, சையது இப்ராஹிம், 46, அன்புச்செல்வன், 39, குளஞ்சிநாதன், 40, ஆகிய மூவரை மதுவிலக்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.அங்கிருந்த, 125 லிட்டர் புதுச்சேரி சாராயம், 560 குவாட்டர் பாட்டில்கள், சீல் இயந்திரம், போலி அரசு முத்திரை ஸ்டிக்கர்கள், டாஸ்மாக் லேபில்கள் மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். காரைக்காலை சேர்ந்த மேலும் மூவரை தேடி வருகின்றனர்.
24-Aug-2024