| ADDED : ஜூன் 16, 2024 01:27 AM
சோழபுரம்:தஞ்சாவூர் மாவட்டம், சோழபுரம் அருகே அய்யாநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. கிளை செயலர் தம்பிதுரை மகன் கோகுல்ராஜ், 25; பட்டதாரி. கடந்த, 12ம் தேதி இரவு பணிக்கு சென்ற கோகுல்ராஜ் மறுநாள் காலை வீடு திரும்பவில்லை. பெற்றோர் புகாரின்படி, சோழபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று காலை கோவிலாச்சேரி பழவாற்றங்கரை பகுதியில் உள்ள சுடுகாட்டில் பாதி எரிந்த நிலையில் கோகுல்ராஜ் உடல் கிடந்தது. சோழபுரம் போலீசார் விசாரித்தனர்.அதில், அரியலுார் மாவட்டம், கஞ்சன்கொல்லையைச் சேர்ந்த பிரேம்குமார், 22, ஆகாஷ், 19 ஆகியோர் அவரை கொலை செய்தது தெரியவந்தது. சென்னையில் பதுங்கி இருந்த பிரேம்குமார் சிக்கினார். ஆகாஷும் கைது செய்யப்பட்டார். பிரேம் குமாரின் உறவினர் பெண்ணை கோகுல்ராஜ் காதலித்ததால், பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால், 12ம் தேதி இரவு கோகுல்ராஜை பேச அழைத்து, கொலை செய்து எரித்ததாகக் கூறினர்.