மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பாத்திமாபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ், 41, விடுதலை சிறுத்தை கட்சியின், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாவட்ட அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி ரூபின்ஷா, கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர்.அலெக்ஸ் வீட்டில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் நடத்திய சோதனையில், அவரது வீட்டின் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த, கெயில் ஆண்டனி, 22, அர்னால்டு ஆண்டனி, 23, அருண்குமார், 21, பால்சாமி, 23, ஆகிய ரவுடிகளை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள். 10-க்கும் மேற்பட்ட கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அலெக்ஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதையடுத்து, கும்பகோணம் உழவர் சந்தை அருகில் பதுங்கி இருந்த அவரை, போலீசார், நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது:அலெக்ஸ் மீது பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு உள்ளது. நான்கு ரவுடிகளை கைது செய்த போது, அலெக்ஸ் வீட்டில் இருந்தார். இருப்பினும், அவரை பிடிக்க முயன்ற போது தப்பித்து விட்டார். வெளியூர்களில் இருந்த அலெக்ஸ் நேற்றுமுன்தினம் வீட்டிற்கு வந்தார். தகவலறிந்து, பதுங்கி இருந்தவரை மடக்கி பிடித்தோம்.இவ்வாறு கூறினர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025