உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வி.சி.க., கவுன்சிலர் கணவர் கைது

ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வி.சி.க., கவுன்சிலர் கணவர் கைது

தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பாத்திமாபுரம் அலெக்ஸ், 41, விடுதலை சிறுத்தை கட்சியின், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர். மனைவி ரூபின்ஷா, கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர்.அலெக்ஸ் வீட்டில் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சோதனையில், அவரது வீட்டின் கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த, கெயில் ஆண்டனி, 22, அர்னால்டு ஆண்டனி, 23, அருண்குமார், 21, பால்சாமி, 23, ஆகிய ரவுடிகளை கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்கள் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள். 10-க்கும் மேற்பட்ட கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். அடைக்கலம் கொடுத்த அலெக்சைதேடி வந்தனர். உழவர் சந்தை அருகில் பதுங்கி இருந்த அவரை, போலீசார், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.போலீசார் கூறியதாவது:அலெக்ஸ் மீது பல போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு உள்ளது. நான்கு ரவுடிகளை கைது செய்த போது, அலெக்ஸ் வீட்டில் இருந்தார். அவரை பிடிக்க முயன்ற போது தப்பித்து விட்டார். வெளியூர்களில் இருந்த அலெக்ஸ் நேற்றுமுன்தினம் வீட்டிற்கு வந்தார். தகவலறிந்து பதுங்கி இருந்தவரை மடக்கி பிடித்தோம்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

s sambath kumar
ஜூலை 24, 2024 13:21

செய்யறது பூராம் அயோக்கியத்தனம். தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி.


Ms Mahadevan Mahadevan
ஜூலை 24, 2024 09:32

எல்லா அரசியல் கட்சிகளிலும் ரவுடிகள் தான் போலும். தூள் படத்தில் வந்தது மாதிரி நிஜத்திலும் நடக்கிறது. மக்கள் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்


deva kumar
ஜூலை 24, 2024 17:57

? உண்மை


Kanns
ஜூலை 24, 2024 08:30

Why Not Encounter Such Instigating-Conspiring Criminals, Dangerous to Society


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி