உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / 150 ஆண்டு பழமையான எந்திரக்கல் கண்டுபிடிப்பு

150 ஆண்டு பழமையான எந்திரக்கல் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே, 150 ஆண்டு பழமையான எந்திரக்கல்லை கல்வெட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். தஞ்சாவூர் மாவட்டம், அய்யாசாமிபட்டி என்ற கிராமத்தில், தமிழ் எழுத்துக்களை கொண்ட ஒரு கல்லை, கிராம மக்கள் வழிபட்டு வருவதாக, தனியார் கல்லுாரி பேராசிரியர் மூவேந்தன் அளித்த தகவலின்படி, சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா ஆய்வு செய்தார். இது குறித்து, காளிராசா கூறியதாவது:தமிழர்களிடம், நடுகல் வழிபாட்டு முறை இருந்தது. எல்லைக்கல்லையை பிடாரி அம்மனாகவும், சூலம் குறியிடப்பட்ட கற்களை முனியசாமியாகவும் வழிபடும் வழக்கமும் உள்ளது. அய்யாசாமிபட்டியில், மூன்று அடி உயரம், ஒன்றேகால் அடி அகலமும் உள்ள கல்லை ஆய்வு செய்த போது, பெருமாளுக்கு உரிய நாமமும், திருவாழியில், சூலங்களும் வரையப்பட்டு இருந்தன.இந்த திருவாழிக்கு கீழ். ஐந்து வரிகள், ஐந்து கட்டங்கள் வடிக்கப்பட்டு, அப்பிரிவுகளின் முடிவில், திரிசூலங்கள் காட்டப்பட்டுள்ளன. அதில் உள்ள கட்டங்களுக்குள், ‛சிவாய நம' என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு உள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு பார்க்கும் போது, 150 ஆண்டுகளுக்கு உட்பட்டதாக கருதலாம். ஊரில் காலரா, அம்மை போன்ற பெருநோய் பாதிப்பில், பலர் இறந்த போது, பெரும் அழிவிலிருந்து காக்க, இம்மாதிரியான எந்திரக் கல்லை எழுதி ஊர் நடுவே வைத்து வழிபட்டு இருக்கலாம்.இக்கல்லை, காவல் தெய்வமாக வழிபடும் ஊர் மக்களுக்கு, இக்கல்லில் உள்ள எழுத்து பற்றியோ ஏதும் தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ