உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தீபாவளி சீட்டு மோசடி தஞ்சையில் 2 பேர் கைது

தீபாவளி சீட்டு மோசடி தஞ்சையில் 2 பேர் கைது

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் சீட்டு நடத்தி, 35 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டையை சேர்ந்த பிரபாகரன், 44, தஞ்சாவூர், ரோஸ்லின் நகரை சேர்ந்த காயத்ரி, 34, ஆகியோர் தஞ்சாவூர், காவேரி நகரில், பி.எம். அசோசியேட் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தனர். இங்கு, 1,000 அல்லது 500 ரூபாய் மாத தவணையாக, 12 மாதம் செலுத்தினால், கூடுதல் போனசுடன், இனிப்பு, பட்டாசு தருவதாக அறிவிப்பு வெளியிட்டனர். இதை நம்பி, ஏராளமானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதிர்வு காலம் முடிந்தும், பணத்தை திருப்பி தராததால், முதலீடு செய்த, 380 பேர், 35 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்து விட்டதாகவும், தஞ்சாவூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு, பிரபாகரன், காயத்ரியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை