மேலும் செய்திகள்
கஞ்சா கடத்தல் 2 வாலிபர்கள் கைது
21-Oct-2024
தஞ்சாவூர்:தஞ்சாவூர் அருகே பள்ளியக்ரஹாரம் - கூடலுார் ரோட்டில் தஞ்சாவூர் கிழக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, ஒரே பதிவெண் கொண்ட இரண்டு கார்கள் வந்ததை கண்டனர். அந்த காரில் இருந்த நான்கு பேரை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. ஒரு காரில் இருந்த ரகசிய அறையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த, 136 கிலோ கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர்.மதுரை, கம்மாகரையை சேர்ந்த ரவிச்சந்திரன், 44, உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்தனர். இரண்டு கார்கள், ஐந்து மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
21-Oct-2024