உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் /  பிளஸ் 2 மாணவனை  கடத்திய 3 சிறுவர் உட்பட 4 பேர் கைது

 பிளஸ் 2 மாணவனை  கடத்திய 3 சிறுவர் உட்பட 4 பேர் கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூர், கீழவாசலை சேர்ந்த சசிகுமாரின், 17 வயது மகன் அரசு உதவி பெறும் பள்ளியில், பிளஸ் 2 படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை, இரு பைக்குகளில் வந்த இளைஞர் கும்பல், அவரை, பள்ளியின் வாசலில் வைத்து அடித்து, பைக்கில் ஏற்றி சென்றனர். மேற்கு போலீசார் விசாரணையில், பைக்கில் ஏற்றி சென்றவர்கள், பிளஸ் 2 மாணவனை, வீட்டில் இறக்கி விட்டு சென்றது தெரிய வந்தது. மாணவனிடம் போலீசார் விசாரித்தனர். இதில், தஞ்சாவூர் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், சில நாட்களுக்கு முன் மாணவரை வேறு ஒரு மாணவர் பைக்கில் இடித்ததாகவும், ஆத்திரமடைந்த மாணவர், நண்பர்களுடன் சேர்ந்து, அந்த மாணவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பழிக்குப்பழி வாங்க நினைத்த, அடி வாங்கிய மாணவர், தஞ்சாவூர் அருகே மனோஜிப்பட்டியை சேர்ந்த வினைவேல், 19, பிள்ளையார்பட்டியை சேர்ந்த, 16 வயது சிறுவன், ரெட்டிபாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோருடன், மாணவரை பைக்கில் கடத்தி சென்று தாக்கியது தெரிய வந்தது. மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து, மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ