உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / பன்னாட்டு மாணவர் மன்ற மாநாட்டில் 6 பேர் பங்கேற்பு

பன்னாட்டு மாணவர் மன்ற மாநாட்டில் 6 பேர் பங்கேற்பு

தஞ்சாவூர்:''பன்னாட்டு மாணவர் மன்ற மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த ஆறு மாணவர்கள் பங்கேற்கின்றனர்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.தஞ்சாவூரில் நேற்று, அமைச்சர் மகேஷ் எழுதிய, 'தேசிய கல்விக் கொள்கை - 2020 என்ற மதயானை' நுால் திறனாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் மகேஷ் கூறியதாவது:ஐ.நா., அமைப்பின், மாணவர் கல்வி பயண திட்டத்தில், தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில், ஆக., 7, 8ல், பன்னாட்டு மாணவர் மன்றத்தில், நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் குறித்து மாநாடு நடைபெறுகிறது.இதில், வேலுார் மாவட்டம், லதேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிஷாந்தினி, நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் மாதிரி பள்ளி மாணவி யாழினி, குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி 10ம் வகுப்பு மாணவன் கமலேஷ், தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி தரணிஸ்ரீ.சேலம், கோட்டை மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஆஷ்வாக், செங்கல்பட்டு மாவட்டம், கண்டிகை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் ராகுல் ஆகிய மாணவர்களும், விழுப்புரம் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜோஸ்பின் தனமேரி ஆகியோர் மாநாட்டில் கலந்து கொண்டு, பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர்.இந்தியாவிலேயே தமிழகம், கல்வியில் தலை சிறந்த மாநிலமாக இருப்பதற்கு, பன்னாட்டு மாணவர் மன்ற மாநாட்டுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் செல்வதே சான்றாகும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ