உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / செங்கல் லோடு லாரி விபத்து: டிரைவர் பலி; 4 பேர் காயம்

செங்கல் லோடு லாரி விபத்து: டிரைவர் பலி; 4 பேர் காயம்

தஞ்சாவூர்; தஞ்சாவூரில் செங்கல் லோடு லாரி கவிழ்ந்ததில் டிரைவர் பலியானார்; நான்கு பேர் காயமடைந்தனர். தஞ்சாவூர், பள்ளியக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரன், 53. இவர், உதாரமங்கலத்தில் இருந்து, லாரியில் செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு, நேற்று ஊருக்கு வந்து கொண்டிருந்தார். லாரியில் பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்த தர்மன், இளையராஜா, அழகர், அம்மன்பேட்டையைச் சேர்ந்த அமர்சிங் ஆகிய நான்கு பேர் இருந்தனர். தஞ்சாவூர் அருகே கூடலுார் பகுதியில் வந்த போது, லாரி திடீரென கவிழ்ந்தது. இதில், கஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். லாரியில் வந்த நான்கு பேரும் காயமடைந்தனர். அவர்கள் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தஞ்சை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !