ரூ.800 கோடி மோசடி செய்த அ.தி.மு.க., நிர்வாகி மீது வழக்கு
தஞ்சாவூர்: சிங்கப்பூரை சேர்ந்த ஷேக் சிராஜுதீன். தொழிலதிபரான இவருக்கு தஞ்சாவூரை சுற்றி பல பகுதிகளில் சொத்துகள் இருந்தன. கடந்த 2015ம் ஆண்டு ஷேக் சிராஜுதீன் இறந்தார். இவரது மனைவி முகமதா பேகம், 76, என்பவர் தன் சொத்துகளை, தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி என்பவரிடம் ஒப்படைத்தார். ஆனால், ஸ்ரீவித்யா சுமதி தனக்கு அறிமுகமான, தஞ்சாவூரை சேர்ந்த அ.தி.மு.க., மத்திய மாவட்ட அம்மா பேரவையின் மாவட்ட தலைவரான செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் மூலம், போலி பவர் ஆப் அட்டர்னி பத்திரம் தயார் செய்து, பலருக்கு விற்றதாக கூறப்படுகிறது. போலி ஆவணங்கள் மூலம், 800 கோடி ரூபாய் மதிப்பிலான இடத் தை அபகரித்ததாக செந்தில்குமார், ஸ்ரீவித்யாசுமதி உள்ளிட்ட 12 பே ர் மீது தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் முகமதா பேகம் புகார் அ ளித்துள்ளார்.