உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / ஒப்பந்த நிறுவனம் மிரட்டல்; துாய்மை பணியாளர் போராட்டம்

ஒப்பந்த நிறுவனம் மிரட்டல்; துாய்மை பணியாளர் போராட்டம்

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாநகராட்சி, ஒப்பந்த துாய்மை பணியாளர் மற்றும் ஓட்டுநர் சங்கம் சார்பில், நேற்று காலை மாநகராட்சி முன், சங்க மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.இரு ஆண்டுகளாக வருங்கால வைப்பு நிதி செலுத்தாத எஸ்.ஆர்.எண்டர்பிரைசஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். கையுறை, முகக் கவசம் போன்ற பொருட்களை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தில், 422 ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் மற்றும் டிரைவர்கள், துாய்மை பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.துாய்மை பணியாளர்கள் கூறுகையில், 'எங்கள் கோரிக்கை குறித்து ஒப்பந்த நிறுவனத்தில் கேட்டால், வேலையை விட்டு நின்று கொள் என, மிரட்டும் தொனியில் பேசுகின்றனர். எங்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ