உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / சாம்பாரில் செத்து மிதந்த பல்லி மருத்துவமனை கேன்டீனுக்கு சீல்

சாம்பாரில் செத்து மிதந்த பல்லி மருத்துவமனை கேன்டீனுக்கு சீல்

தஞ்சாவூர்:தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், புதுக்கோட்டையை சேர்ந்த பெண் ஒருவர், உள்நோயாளியாக சிகிச்சை பெறுகிறார். அவரது உறவினர்கள் சிலர், நேற்று அவரை பார்ப்பதற்காக வந்தனர். அவர்களில் ஒருவர் மூன்று பார்சல் சாப்பாடு வாங்கி சென்றார். இந்த உணவை பெண் நோயாளி சாப்பிட முயன்ற போது, சாம்பாரில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார். அந்த உணவை சாப்பிடாமல் மூவரும் துாக்கி வீசினர். நோயாளியின் உறவினர்கள், பணியில் இருந்தவர்களிடம் தெரிவித்தனர்.உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று, சம்மந்தப்பட்ட உணவகத்தை ஆய்வு செய்தனர். அப்போது, உணவகம் சுகாதாரமற்ற முறையில் இருந்தது. உணவகத்தின் 'லைசென்ஸ்' ஆறு மாதமாக, புதுப்பிக்காமல் செயல்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்து, உணவகத்தை பூட்டினர். இது தொடர்பாக உணவகத்தின் ஒப்பந்ததாரர் சுதாகரன் என்பவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி