உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கொட்டாங்குச்சியில் டீ மாமியார், மருமகள் கைது

கொட்டாங்குச்சியில் டீ மாமியார், மருமகள் கைது

மொரப்பூர்:தர்மபுரி மாவட்டம், கோபிநாதம்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரன், போளையம்பள்ளி ராஜலிங்கம் ஆகியோர் மாரப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரது நிலத்தை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர்.இவர்கள் சாகுபடி செய்திருந்த கொள்ளு செடியை பிடுங்கும் பணியில் போளையம்பள்ளியை சேர்ந்த செல்லி, 50, ஸ்ரீபிரியா, 38, வீரம்மாள், 55, மாரியம்மாள், 60, ஆகிய 4 பேரும் ஈடுபட்டனர். அப்போது, புவனேஸ்வரனின் தாய் சின்னதாய், 55, என்பவரிடம் செல்லி டீ கேட்டுள்ளார். அவரது மருமகள் தரணி, 36, வீட்டில் இருந்து சொம்பில் டீயும், ஒரு சில்வர் டம்ளர், மூன்று கொட்டாங்குச்சி எடுத்து வந்து, செல்லி உள்ளிட்டோருக்கு கொட்டாங்குச்சியில் டீ ஊற்றி கொடுத்துள்ளார். இது குறித்து செல்லி புகார்படி, கம்பைநல்லுார் போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிந்து சின்னதாய், தரணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை