உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / இலவச ஆடு வழங்கல் ஆலோசனை கூட்டம்

இலவச ஆடு வழங்கல் ஆலோசனை கூட்டம்

தஞ்சாவூர்: அண்ணாத்துரை பிறந்த நாளான செப்டம்பர் 15ம் அன்று தமிழக அரசால் ஆரம்பிக்கப்படவுள்ள ''இலவச வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டம்'' மற்றும் ''இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டம்'' ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் விதம் குறித்த கலந்தாலோசனை கூட்டம் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நடந்துது.எட்டாம் தேதி நடக்கவுள்ள சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கும் திட்டங்களின் செயல்பாடு குறித்து விளக்கவும், விண்ணப்பங்கள் பெறுவது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. விண்ணப்பதாரர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் பெறப்பட்ட பின்னர் பயனாளிகள் தேர்வு செய்தல், கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கும் பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது. தஞ்சாவூர் கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் டாக்டர் அருள்மணி, தஞ்சாவூர் உதவி இயக்குனர் (பஞ்சாயத்துகள்) டாக்டர் சுரேஷ், தஞ்சாவூர் உதவி இயக்குனர் (கால்நடை பராமரிப்பு), டாக்டர் முகமது கனி, பட்டுக்கோட்டை உதவி இயக்குனர்நெடுஞ்செழியன், துணை வட்டாளர் வளர்ச்சி அலுவலர் (பஞ்.,கள்) பழனிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்