மேலும் செய்திகள்
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளிக்கு போக்சோ
19-Sep-2025
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தெற்கு வீதியில் யூ.ஏ.இ., எக்ஸ்சேஞ்ச் 263 கிளையினை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் திறந்து வைத்தார். தஞ்சாவூர் எம்.எல்.ஏ., ரெங்கசாமி, யூ.ஏ.இ., நிறுவன இந்திய தலைவர் ஜார்ஜ் அந்தோணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல வளர்ச்சி அலுவலர் சுந்தர் வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர் வைத்திலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்த அய்யாவு மனைவி வள்ளியம்மை, கும்பகோணம் மேலக்காவிரியை சேர்ந்த காத்தான் மனைவி பாப்பாத்தி, திருவாரூர் மாவட்டம் மாவூர் சுந்தரேசன் தாயார் அஞ்சம்மாள், நாகை மாவட்டம் திட்டச்சேரி ராஜேந்திரன் மகன் சுதர்சன் ஆகியோருக்கு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நீண்டகாலமாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதால் இந்த நான்கு பயனாளிகளுக்கும் தலா ரூபாய் 15 ஆயிரம் வீதம் மொத்தம் ரூபாய் 60 ஆயிரம் உதவித்தொகையை வழங்கினார்கள். தஞ்சாவூர் தூய இருதய பெண்கள் மேநிலைப்பள்ளி மாணவிகள் இரண்டு பேருக்கும், தஞ்சாவூர் காதுகேளாதார் மேநிலைப்பள்ளி மாணவ மாணவியர் இருவர் என மொத்தம் 4 பயனாளிகளுக்கு தலா ரூபாய் இரண்டாயிரம் வீதம் ரூபாய் எட்டாயிரம் என மொத்தம் ரூபாய் 68 ஆயிரம் மதிப்பிலான நல உதவிகளை அமைச்சர் வைத்திலிங்கம் வழங்கினார். இதில் யூ.ஏ.இ., எக்ஸ்சேஞ்ச் மனித வள தலைவர் ஜான் ப்ரவின், மண்டல தலைவர் கார்த்திகேயன், யூ.ஏ.இ., தமிழ்நாடு தலைவர் ஷாலு பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். கிளை மேலாளர் ஷாஜகான் நன்றி கூறினார்.
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025
19-Sep-2025