உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / மூன்று சமுதாயக்கூடம் கட்ட தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கல்

மூன்று சமுதாயக்கூடம் கட்ட தஞ்சை மாவட்ட கலெக்டரிடம் ரூ.35 லட்சம் நிதியுதவி வழங்கல்

தஞ்சாவூர்: 'சமுதாய கூடம் கட்ட 35 லட்சம் ரூபாயை' தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரனிடம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சார்பில் அதன் பொதுமேலாளர் அனில்குமார் பான் வழங்கினார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பாகோணம் வட்டம் கள்ளூர் பஞ்சாயத்து, பாபநாசம் வட்டம் சூலமங்கலம், அம்மாபேட்டை வட்டம் புளியங்குடி ஆகிய பஞ்சாயத்துகளில் மக்களின் வசதிக்காக மூன்று சமூதாய கூடங்கள் கட்ட ரூபாய் 35 லட்சம் நிதியுதவிக்கான காசோலையினை கலெக்டர் பாஸ்கரனிடம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் பொது மேலாளர் அனில்குமார் வழங்கினார். உடன் ஹிந்துஸ்தான் துணை பொதுமேலாளர் யாதவ், டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், முதுநிலை மண்டல மேலாளர் நாராயணன், மேலாளர்கள் பாரத் பெட்ரோலியம் திருச்சி கோபிநாத், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் லோகநாதன் ஆகியார் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி