உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / திருபுவனம் பட்டு கூ. சங்கம் முன் தொடர் உண்ணாவிரத போராட்டம்

திருபுவனம் பட்டு கூ. சங்கம் முன் தொடர் உண்ணாவிரத போராட்டம்

கும்பகோணம்: திருபுவனம் பட்டுக்கைத்தறி தேசிய நெசவாளர் சங்கம் சார்பில், ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க வாயில் முன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கும்பகோணம் அருகிலுள்ள திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர்களின் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சன்னதி தெருவில் திருபுவனம் பட்டு கூட்டுறவு சங்க தலைமையக வாயில் முன் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. கவுரவ தலைவர் ராஜாங்கம் கலந்துகொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தொடக்க நிகழ்ச்சியில் வட்டார காங்கிரஸ் தலைவர் முருகேசன், திருநாகேஸ்வரம் நகர தலைவர் சண்முகம், டவுன் பஞ்., முன்னாள் தலைவர் உமாமகேஸ்வரி நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.சங்கத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். காலதாமதமின்றி ஜரிகை வழங்க வேண்டும், சங்கம் நேரிடையாக ஜரிகை கொள்முதல் செய்யவேண்டும், அங்கத்தினர்களுக்கு 30 சத கூலி உயர்வு வழங்கவேண்டும். மாத ஓய்வூதியம் 1,000 ரூபாய் வழங்கவேண்டும், மத்திய அரசு கைத்தறி நெசவாளர்களுக்கு 3,000 கோடி ரூபாய் தள்ளுபடியினை தமிழக பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க ஆவன செய்யவேண்டும். அனைத்து ரகத்திற்கும் உச்சவரம்பின்றி 30 சதவீதம் தள்ளுபடி, மானியம் வழங்கவேண்டுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. உண்ணாவிரதத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை