உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தி.மு.க., நகர செயலாளர் கார் விபத்தில் பரிதாப பலி

தி.மு.க., நகர செயலாளர் கார் விபத்தில் பரிதாப பலி

பாபநாசம்: அய்யம்பேட்டை நகர தி.மு.க., செயலாளர் புகழேந்தி கார் விபத்தில் பலியானார். இவரது உடலுக்கு தி.மு.க.,வினர் பலர் அஞ்சலி செலுத்தினர். தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே பசுபதிகோவில் ரயில்வே ஸ்டேஷன் தெருவில் வசித்து வருபவர் திருவேங்கடம் மகன் புகழேந்தி. இவர் அய்யம்பேட்டை நகர தி.மு.க., செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்றுமுன்தினம் இரவு 8 மணியளவில் தஞ்சாவூர் சென்றுவிட்டு தனது இன்னோவா காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார். பசுபதிகோவில் பெட்ரோல் பங்க் அருகே கார் வரும்போது நிலை தடுமாறி அருகில் இருந்த மரத்தில் கார் மோதியது. இதில், படுகாயமடைந்த புகழேந்தி சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அய்யம்பேட்டை போலீஸார் விசாரிக்கின்றனர். இறந்த நகர செயலாளர் புகழேந்தி கடந்த 1997ம் ஆண்டு முதல் தொடர்ந்து அய்யம்பேட்டை நகர செயலாளராக இருந்து வந்தார். இவரது உடலுக்கு முன்னாள் அமைச்சர் உபயதுல்லா, வக்கீல் ராஜ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யாராசு, பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைசெல்வம், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சுரேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட ஏராளமான தி.மு.க.,வினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை