மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
கும்பகோணம்: திருவிடைமருதூர் பகுதியில் சாராய விற்பனை செய்த நான்கு பேரை மதுவிலக்கு போலீஸார் அதிரடி சோதனை நடத்தி கைது செய்தனர். கும்பகோணம் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சொக்கநாதன் தலைமையில், எஸ்.எஸ்.ஐ., ராஜேந்திரன், ஏட்டுகள் ஜோதி, ரவிச்சந்திரன் ஆகியோர் திருவிடைமருதூர் பகுதிகளில் சாராயம் விற்கப்படுவதாக வந்த தகவலின் பேரில், அதிரடியாக ரோந்து சென்றனர். பந்தநல்லூர் அருகே ஆலங்காடு பகுதி தம்புசாமி மகன் பாண்டியன்(54) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தார். அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். பாண்டியனை கைது செய்தனர். தொடர்ந்து, கருப்பூர் தோப்புத்தெருவை சேர்ந்த கோதண்டம்(50) என்பவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. கோதண்டத்தை கைது செய்தனர். கோதண்டத்தின் மருமகன் மாரியப்பன் (40) என்பவரும் சாராய விற்பனை செய்துகொண்டிருந்தார். அவரிடமிருந்து 55 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்து, மாரியப்பனும் கைது செய்யப்பட்டார். மரத்துறை கடலங்குடியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் போலீஸாரை கண்டதும் ஓட்டம் பிடித்துள்ளார். அவரையும் விரட்டி பிடித்தனர். அவரிடமிருந்த 55 லிட்டர் சாராயத்தை கைப்பற்றி அழித்தனர். அய்யப்பனும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நான்கு பேர்களும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025