உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / இழுத்து மூடிய கொலை வழக்கு துப்பு துலக்கினர் தஞ்சை போலீஸ்

இழுத்து மூடிய கொலை வழக்கு துப்பு துலக்கினர் தஞ்சை போலீஸ்

தஞ்சாவூர்: கடந்த ஏழாண்டாக கண்டறிய முடியாத கொலை வழக்கில், தஞ்சை தனிப்படை போலீஸார் சிறந்த முறையில் துப்பு துலங்கி, குற்றவாளிகளை கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் கண்டறிய முடியாத நிலையில் உள்ள, கொலைக்குற்றம் மற்றும் கொள்ளை வழக்குகளை ஆய்வுச் செய்து, மீண்டும் விசாரணை நடத்த தனிப்படை அமைத்து, தஞ்சை டி.ஐ.ஜி., ரவிக்குமார், எஸ்.பி., அனில்குமார் கிரி உத்தரவிட்டனர். கடந்த 2004 டிச., 13ம் தேதி, தஞ்சாவூர் தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட அருளானந்த நகர் விரிவாக்கம் அழகு நகரில் உள்ள ஒரு வீட்டில் காவலாளி மண்வெட்டியால் அடித்து கொல்லப்பட்ட வழக்கு, கண்டறிய முடியாத குற்றமாக 2008 செப்., மாதம் முடிவு செய்யப்பட்டது. தனிப்படையினர் நடத்திய விசாரணையில், ஜெபமாலைபுரம் புதுத்தெருவை சேர்ந்த செல்வம் மகன் பிரகாஷ் (28), அவரது நண்பர்கள் அதே தெருவைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் ஆன்சன் டேனியல் (34), இறந்து போன ராஜேஷ் என்பவருடன் சேர்த்து காவலாளியை அடித்து கொன்று, அவரிடம் இருந்த 5,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. அதையடுத்து, பிரகாஷ், ஆன்சன் டேனியல் கைது செய்யப்பட்டனர். கடந்த ஏழாண்டாக கண்டறிய முடியாத நிலையில் வழக்கை, சிறந்த முறையில் துப்புத் துலங்கிய தனிப்படை போலீஸாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை