மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தெருவோரத்தில் தெருநாய் தடுப்பூசி முகாம்
20-Sep-2025
தஞ்சாவூர்: தஞ்சையை சேர்ந்த ரியல் எஸ்டேட் உரிமையாளர் வீட்டில் 10 பவுன் நகைகளை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீஸார் தேடுகின்றனர். தஞ்சை மாவட்டம் மானோஜிப்பட்டி உப்பரிகை தெரு ஜானகிராம் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் (54). ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர். தஞ்சை மருத்துக்கல்லூரி சாலை அலமேலு நகரில் புதியதாக வீடு கட்டினார். கடந்த வாரம் பழைய வீட்டில் இருந்து புதிய வீட்டுக்கு குடிவந்தார். பழைய வீட்டில் இருந்த பீரோவில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் சில பொருட்களை புதிய வீட்டுக்கு மாற்றவில்லை. கடந்த 20ம் தேதி பழைய வீட்டுக்கு சந்திரசேகரன் சென்றிருந்தபோது, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் பத்திரமாக இருந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் சந்திரசேகரன் வீட்டுக்கு சென்றபோது, வீட்டின் பக்கவாட்டில் இருந்த ஜன்னல் பெயர்க்கப்பட்டு, வீட்டில் இருந்த பீரோவிலிருந்து 10 பவுன் நø க, 250 கிராம் வெள்ளி பொருட்கள், 14 ஆயிரம் ரூபாயை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து சந்திரசேகரன் கொடுத்த புகாரின்பேரில், தஞ்சை மருத்துவக்கல்லூரி இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடுகின்றனர்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025
20-Sep-2025