உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / தஞ்சையில் தேர்வுக்கு சென்ற மாணவி "மாயம்

தஞ்சையில் தேர்வுக்கு சென்ற மாணவி "மாயம்

தஞ்சாவூர்: தஞ்சையில் பள்ளியில் தேர்வெழுத சென்ற மாணவி திடீரென மாயமானார். தஞ்சை நாச்சிக்குறிச்சி சேகர் காலனியை சேர்ந்தவர் இளங்கோ. டூவீலர் மெக்கானிக்கான இவரது மகள் ஜனனி (எ) அர்ச்சனா (15). தஞ்சை செயின்ட் ஜோசப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தார். கடந்த 23ம் தேதி, தேர்வெழுத செல்வதாக கூறி, அர்ச்சனா வீட்டை விட்டு கிளம்பினார்.மீண்டும் வீடு திரும்பவில்லை. பள்ளிக்கு சென்று இளங்கோ விசாரித்தபோது, தேர்வு முடித்து அன்று மாலை ஐந்து மணிக்கே அர்ச்சனா பள்ளியில் இருந்து கிளம்பிவிட்டது தெரிந்தது. உறவினர்கள், நண்பர்கள் வீட்டில் தேடியும் அர்ச்சனா கிடைக்கவில்லை. இதையடுத்து இளங்கோ, தஞ்சை தெற்கு போலீஸில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் (பொ) சோமசுந்தரம் மற்றும் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மாணவி அர்ச்சனாவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ