உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / சாதனை மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

சாதனை மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

தஞ்சாவூர்: தேசிய வாலிபால் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவியை கலெக்டர் பாஸ்கரன் பாராட்டினார். தேசிய கண்தான வார விழா தஞ்சையில் நடந்தது. இதையொட்டி கண்தானம் என்ற தலைப்பில் மாவட்ட அளவில் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டது. 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் தஞ்சை வீரராகவ மேல்நிலைப்பள்ளி மாணவர் இனியன் முதலிடம் பெற்று ரூ. 3 ஆயிரம் பரிசை தட்டிச்சென்றார். பட்டுக்கோட்டை புனித இசபெல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி அஜிதா இரண்டாம் இடத்தையும், திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹரிதன்வந்திரி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். இவர்களுக்கான பரிசுத்தொகைகளை கலெக்டர் பாஸ்கரன் வழங்கி வாழ்த்தினார். மாணவிக்கு பாராட்டு: தேசிய பள்ளிகள் விளையாட்டு குழுமத்தின் சார்பிலான 57 வது விளையாட்டு போட்டிகள் ஆந்திரா, கர்நாடகா, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளுக்கான தமிழ்நாடு அணித்தேர்வுப்போட்டிகள் தர்மபுரியில் நடைபெற்றன.இதில் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் தஞ்சை ஆவணியாபுரம் கிரசெண்ட் மேல்நிலைப்பள்ளி மாணவி சண்முகப்பிரியா, தமிழக அணிக்கு தேர்வு பெற்று தேசிய வாலிபால் போட்டிக்கு தகுதி பெற்றார். சாதனை மாணவி சண்முகப்பிரியாவை, கலெக்டர் பாஸ்கரன் பாராட்டி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் சாந்தமூர்த்தி, மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளர் கிரிதர், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை