மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் திருட்டு
01-Oct-2025
மனைவி தற்கொலையால் கணவரும் விபரீத முடிவு
29-Sep-2025
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது
25-Sep-2025
தஞ்சாவூர்: தஞ்சை மன்னர் சரபோஜியின் பிறந்தநாளையொட்டி, சரஸ்வதி மஹால் நூலக வெளியீடு புத்தகங்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுகுறித்து தஞ்சாவூர் கலெக்டரும், சரஸ்வதி மஹால் நூலகத்தின் இயக்குனருமான பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சையை ஆண்ட மராத்தி மன்னர் சரபோஜியின் 234வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில், சரஸ்வதி மஹால் நூலகம் வெளியிடும் நூல்களுக்கு சிறப்புச் சலுகையாக, நூல்களின் விலையில் 50 சதவீத தள்ளுபடி செய்து, செப்., 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை விற்பனை செய்யப்படுகிறது. அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, பன்மொழி இலக்கிய, இலக்கண நூல்களையும், கோவில் கலை, ஜோதிடம், மருத்துவம், நாட்டியம், இசை, நாடகம், கணிதம், வாஸ்து போன்ற பல்வேறு துறைச்சார்ந்த நூல்களையும் அனைத்து தரப்பினரும் சலுவை விலையில் வாங்கி பயன்பெறவேண்டும்.
01-Oct-2025
29-Sep-2025
25-Sep-2025