உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தஞ்சாவூர் / கும்பாபிஷேக கோவில்களில் துர்கா ஸ்டாலின் வழிபாடு

கும்பாபிஷேக கோவில்களில் துர்கா ஸ்டாலின் வழிபாடு

தஞ்சாவூர் : திருவையாறு ஐயாறப்பர், புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், துர்கா ஸ்டாலின் நேற்று மாலை வழிபட்டார்.தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோவிலுக்கு நேற்று மாலை துர்கா ஸ்டாலின் வந்தார். அவரை தருமபுர ஆதீனத்தைச் சார்ந்த கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்றனர்.தொடர்ந்து, ஐயாறப்பர் சன்னதி, அறம்வளர்த்த நாயகி சன்னதியில் துர்கா ஸ்டாலின் வழிபட்டார். இதையடுத்து, புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின், அம்மனுக்கு புடவை சாத்தி வழிபட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

Uuu
பிப் 22, 2025 11:35

பேருக்கும் பெட்சுக்கும் சம்பந்தமில்லாத வைகுண்டம் கருத்து


ramani
பிப் 22, 2025 07:18

கணவனும் மகனும் தவறுக்கு மேல் தவறு செய்கிறார்கள். அவர்களின் பாபம் உங்கள் பக்தியை குலைத்து விட்டது. லிமிட்டை தாண்டி விட்டார்கள். இனியும் கடவுள் பார்த்து கொண்டு இருக்க மாட்டார். உங்க பக்தி ஷோ இனி எடுபடாது


வாய்மையே வெல்லும்
பிப் 22, 2025 07:16

உலகமகா நடிப்பு டோய் ... கோடம்பாக்கமே உங்க நடிப்புக்கு பக்தி திலகம் என முடிசூட காத்திருக்கு ..


N Srinivasan
பிப் 21, 2025 15:01

முதல் அமைச்சர் தமிழ்நாட்டில் மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வதை விட அவருடைய மனைவி அதிகமாக செல்கிறார் கோவில் கோவிலாக


Rajan A
பிப் 21, 2025 14:05

அவருக்கு தான் பக்தி இருக்கும்.


Sankar SKCE
பிப் 21, 2025 13:24

இந்த செய்திஎல்லாம் போடாதீங்க. பார்க்கவே எரிச்சலா இருக்கு... இந்த கொள்ளை கும்பலை இன்னும் எத்தனை நாள் சகிக்கணுமோ தெரியல. இந்த கும்பல் அட்டூழியத்தை பார்க்கும்போது கடவுள் இல்லை என்பது உண்மை ஆகிறது. இந்த விசயத்தில் திருட்டுவிடிய குமபல் வெற்றி பெற்றதாகவே கருத வேண்டும்.


Palanisamy T
பிப் 22, 2025 05:05

கடவுள் இல்லையென்றால் இந்த வானமும் பூமியுமில்லை. நீங்களும் நானுமில்லை. அவனிருப்பதால்தான் இந்த மாய உலகம் நமக்கு தெரிகின்றது. அவனொருவனால்தான் அனைத்தும் இயங்குகின்றது. அவனை நாம் சிவமாகவும் கந்தக் கடவுளாகவும் வணங்குகின்றோம். முதலில் மாயை என்னவென்று புரியமுற்ப்படுங்கள். திருவாசகம் சொல்லும் உண்மை செய்தியிது. திருவாசகம் இப்போது வந்த நூல். ஆனால் அன்றே சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் வரையப் பட்ட தொல்க்காப்பிய நூலிலும் இந்த உண்மைகளை அறியலாம். அந்த அளவிற்கு தொன்மையும் உண்மைகளும் பெருமைகளும் கொண்டது நம் தாய் மொழி. நம் மொழியை இன்றும் என்றும் இனியென்றும் நாம் போற்ற வேண்டும், காப்பாற்ற வேண்டும். இது நம் கடமை.


Muralidharan S
பிப் 21, 2025 13:06

கடவுள் நல்ல தூய எண்ணங்களுடன், பிறருக்கும், உலகத்திற்கும் நன்மை பயக்கும் காரியங்களை மட்டுமே செய்துகொண்டு, தீய சிந்தனைகள் இல்லாதா அப்பழுக்கற்ற தெய்வநம்பிக்கை உள்ளவர்களுக்கு , அதிகாரம், அகங்காரம், ஆணவம், அகந்தை இப்படி எதுவும் இல்லாமல், தெய்வத்திடம் சரணாகதி அடைபவர்களுக்கு மட்டும்தான் துணை நிற்பார். இப்பொழுது நடக்கும் நன்மைகள் எல்லாம் பூர்வ ஜென்மா புண்ணியங்களால்தான்.. ஆனால், இது தொடருமா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்..... கர்மா தன வேலையே நாம் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் சரியாக செய்யும்...அது நல்லதாக இருந்தாலும் சரி... தீயதாக இருந்தாலும் சரி.. பாவத்திற்கு பரிகாரமோ, பாவ மன்னிப்போ என்றுமே கிடையாது.. அனுபவித்துத்தான் கழிக்கவேண்டும்.. அது யாராக இருந்தாலும் சரி.. அது எத்தனை ஜென்மங்களானாலும் சரி.. இதுதான் சனாதன தர்மம்..


V வைகுண்டேஸ்வரன்
பிப் 21, 2025 17:16

"பாவத்திற்கு பரிகாரமோ, பாவ மன்னிப்போ என்றுமே கிடையாது" என்கிறீர்கள். அப்புறம் எதுக்கு, இந்த கோவிலில் இந்த பூஜை பண்ணினால் கஷ்டங்கள் தீரும், அந்த கோவிலில் அந்த பூஜை பண்ணினால் கவலைகள் தீரும். இங்கே போய் இந்த அபிஷேகம் பண்ணினால் தடைப்பட்ட திருமணம் நடக்கும் என்றெல்லாம் சொல்கிறீர்கள்?? சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு விநாயகரை வணங்கினால் சங்கடங்களை ஹரம் பண்ணிடுவார், பிரதோஷம் அன்று சிவனை வழிபட்டால் நன்மைகள் நடக்கும் என்கிறீர்கள்? //"அனுபவித்துத்தான் கழிக்கவேண்டும்.//" என்றால் எதுக்கு பரிகார பூஜைகள்??


Dharmavaan
பிப் 21, 2025 12:22

இவர் கோயில் கோயிலாக போவதால் பக்தர்களுக்கு இடையூறு என்று நிறுத்தப்போகிறார்


Keshavan.J
பிப் 21, 2025 11:04

என்ன ஒரு மொள்ளமாறித்தனம்


angbu ganesh
பிப் 21, 2025 10:25

எனக்கு bp எகுறுது யாரை குற்றம் சொல்வது இவனுங்களுக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பவர்களுக்கா இல்ல ஹிந்துக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் முதல்வரின் மனைவிய சொல்வதை


V வைகுண்டேஸ்வரன்
பிப் 21, 2025 17:21

ஒரு பெண்மணி கோவிலுக்குப் போய் சாமி கும்பிடுவதால், எந்த ஹிந்துக்கள் முட்டாளாக்கப்படுகிறார்கள் என்கிறீர்கள்?? "முதல்வரின் மனைவி கோவில்களுக்கு வருவதால் நான் இனிமேல் திமுக விற்கு ஓட்டு போடுவேன் " என்று எவனும் மாறப் போவதில்லை. "முதல்வரின் மனைவி கோவில்களுக்கு வருவதால் நான் இனிமேல் திமுக விற்கு ஓட்டு போட மாட்டேன்" என்றும் எவனும் மாறப் போவதில்லை.


முக்கிய வீடியோ