| ADDED : ஜன 05, 2024 10:51 PM
தஞ்சாவூர்:காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆற்று பாசனம், பருவமழையை நம்பி, 10 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. போதிய நீர் இன்றி திருவோணம், ஊரணிபுரம், கணபதி அக்ரஹாரம், ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில், வயல்கள் வெடித்து காணப்படுகின்றன.காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற குறைந்தது, 10 நாட்களுக்கு, 10,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், திருவோணம், பூதலுார் ஆகிய பகுதிகளை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி, பூதலுார் தாலுகா அலுவலகம் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.